வேர்க்கடலையில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து அதிகமாக
உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பும் அதிக அளவு உள்ளது. சர்க்கரை
வியாதி உள்ளவர்கள் வேர்க்கடலையை அளவாக பயமின்றி சாப்பிடலாம். ஏனெனில்
வேர்க்கடலையில் இருந்து உடலில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவுதான். இன்சுலினை
சுரக்கும் ஹோர்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மை வேர்க்கடலையில் காணப்படும்
மெக்னீசியத்திற்கு உண்டு. கர்பிணிகளுக்கு
மிகவும் அவசியமான வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி 3 போன்றவை அதிகம்
உள்ளது. பிறக்கும் குழந்தைகளின் நரமபுக் கோளாறுகளை சரி செய்யும் தன்மை
வேர்க்கடலைக்கு உண்டு. கர்ப காலத்தில் கர்பிணிகள் நிலக்கடலை உண்பது நலம்.
வேர்க்கடலை உண்பதனால் இரத்த அழுத்தம் குறையும். வேர்க்கடலையில் உள்ள நைட்ரிக்
அமிலம் நம் உடலில் நைட்ரேட் உற்பத்தியை உண்டு பண்ணி ரத்தக் குழாய்களை விரிவடையச்
செய்கிறது. இதனால் சீராக இருப்பதோடு இரத்த அழுத்தமும் குறைகிறது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்சிடென்ட் (Anti – Oxidant) இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற
கழிவுகளை நீக்கி விடும். தேவையில்லாமல் இரத்தத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும்
கழிவுப்பொருட்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப்பொருட்கள் கல்லீரலுக்கு
அனுப்பிவிடும். பின் அவை அங்கிருந்து கழிவாகி உடலில் இருந்து வெளியேறிவிடும்.
வேர்க்கடலையை எண்ணையில் இட்டு வறுத்து சாப்பிடக்கூடாது.
அவித்து உண்ணலாம் அல்லது எண்ணெய்யிலிடாமல் வறுத்து சாப்பிடலாம். வேர்க்கடலையின்
தோலில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன. அதனால் வேர்க்கடலையை தோளை நீக்காமல் உண்ண
வேண்டும். வேர்க்கடலையை கடலைமிட்டாய் போன்ற சத்துள்ள பண்டமாகவும் செய்து
சாப்பிடலாம்.
